ரமலான் மாசம் வந்தாலே எனக்கு என்னோட சின்னப் பருவம் நினைவுக்கு வருது..
நாலு வயசா இருக்கிறப்போ நான் நோன்பு பிடிக்க ஆரம்பிச்சிட்டேன்.. நான் நோன்பு பிடிக்கிறப்போ என்ன விட என்னோட பெற்றோர் தான் ரொம்ப கஷ்டப் பட்டாங்க.. நோன்பின் முழு அர்த்தமும் புரியாத வயசு அது.. பகல் நேரங்களில் உணவைக் கண்டதும் அதைக் கேட்கும் தருணங்களில் என்னை திசை திருப்ப உம்மா சொல்லும் கதைகள்.. என்ன பைக்ல வெச்சி அந்திப் பொழுது பூரா நகரத் தெருக்களைப் பராக்கு காட்டி திரியும் வாப்பா.. விளையாட்டுப் பொருட்களுடன் சேர்ந்து என்னுடன் விளையாடும் என் பெற்றோர்.. அசருக்குப் பிறகெல்லாம் கடை வீதிக்கு கூட்டிச் சென்று சின்ன உணவுப் பொட்டலங்கள வாங்கித் தந்து, நேரத்தைப் போக்கும் போது சில தருணங்களில் அந்த பொட்டலங்களை கைல இறுக்கிப் பிடித்த வண்ணம் வாப்பாட கையிலேயே உறங்கிடும் நான்.. அத பார்த்து நெகிழும் என் பெற்றோர்.. அசருக்கு பாங்கு சொல்றப்போ "இன்னும் ஒரு பாங்கு சொன்ன நோன்பு திறக்கலாம் மகள் " என்று மனதளவில் நம்பிக்கையை ஊட்டும் உம்மா.. நோன்பு திறக்க அரை மணி நேரத்துக்கு முன்னே என்னை பாயில் அமர வைக்கும் உம்மா.. சகர் பொழுதுகளில் கண்விழிக்க கஷ்டப்பட்டாலும் ஆர்வத்தோட எழும்பி உம்மா ஊட்டி விட்றத அரை குறையாக உண்ணும் நான்.. காய்ச்சல், தடுமல், வந்தாக் கூட அல்லாக்கிட்ட "அல்லா நான் உனக்காக நோன்பும் புடிச்சேன் தானே.. இத சுகமாக்க மாட்டியா.." என்று சிறு பிள்ளைத் தனமா எண்டாலும் நம்பிக்கையோட பிரார்த்தனை செய்றப்போ அதக் கண்டு கலங்கின கண்களை விளங்காமல் துடைக்கும் என் உம்மா.. இரவுப் பொழுதுகளில் உம்மாவைப் பின்பற்றி தராவிஹ் தொழும் போது ஒவ்வொரு ரக்காத்தின் முடிவிலும் இன்னும் எத்தன ரக்காத் இருக்கு என்று உம்மாக்கிட்ட வினவினாலும் அதுல மறைந்து இருந்த இறை நம்பிக்கையை இப்பவும் நினைக்கையில் நெஞ்சு பூரிக்கிறது.. அதே தராவிஹ் தொழுகையில் ஏதோ ஒரு ரக்காத் இல் சுஜூத் இல் என்னை அறியாமலே தூங்கும் வரை சலிக்காம உம்மாவ பின்பற்றித் தொழும் அளவு என் மனசுல நம்பிக்கைய விதைச்ச என் பெற்றோருக்கு இறைவன் நீடிய வாழ்க்கைய வழங்கட்டும்.. உம்மா ஒதுறப்போ சும்மாவாச்சும் குரானை விரித்துப் பிடித்துக் கொண்டிருக்கும் நான்.. பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் சண்டைக்கு வந்தாலும் நோன்பு போயிடுமே என்ற ஒரு பேணுதல் அப்போ எனக்குள்ள வந்தது அதிசயம் தான்.. வீட்ல தண்ணீர் இருக்கு, சாப்பாடு இருக்கு, பசி இருக்கு, தாகம் இருக்கு, பெற்றோர் அசந்த நேரம் இருக்கு, யாருக்கும் தெரியாம சாப்பிடலாம் என்ற எண்ணம் கூட வராத அளவுக்கா என் மனசுல ஈமானை விதைத்தாங்க.. சுபஹானல்லாஹ்.! உண்மைலேயே அந்தக் கள்ளம் கபடமில்லாத மனசு எப்பவும் இருக்கணும்.. இத உங்க கூட பகிர்ந்துக்கணும் போல தோணிச்சு.. அந்த நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கு..
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொல்லுவாங்க..
உண்மை தான்.. எந்த நல்ல விடயத்தையும் சின்ன வயசுல இருந்தே நம்ம குழந்தைகளுக்குப் பழக்க வேணும்..
இப்போ நாங்க எல்லாரும் கண்ணியமான ரமலான் மாசத்துல இருக்கோம்.. நோன்பு நோற்க வேண்டியது முஸ்லிம் எல்லோர்டையும் கட்டாயக் கடமை..
இந்த விசயத்துல பெரும்பாலான பெற்றோர் தவறு இழைக்குறார்கள். சின்னப் பிள்ள தானே பாவம்.. பசி தாங்காது அப்பிடி சொல்லி அவர்களை நோன்பு நோற்கப் பழக்கத் தவறுகிறார்கள்.. பெற்றோர் இந்த விடயங்களில் தங்களோட குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் மனசு சின்ன விடயத்தையும் இலகுவில் பதித்துக் கொள்ளும்.. ஆரம்பத்திலேயே அதன் மனசுல நல்ல விடயங்கள விதைக்கணும்.. தந்தை மார் தொழிலையோ வேறு எதையோ காரணம் காட்டி தங்கள் குழந்தைகளின் முன்னிலையில் மார்க்க விடயங்களில் அலட்சியப் போக்குடன் இருக்கக் கூடாது..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக