செவ்வாய், ஜூன் 14, 2011
கானல்நீர்க் கண்ணீர்....!!!
விரக்தியின் விளிம்பில்
நின்று நான் எழுதிய கவிதையை
வெற்றியின் சின்னம் என்று
எவ்வாறு சொல்ல...?
இது வேதனைகளின் வெளிப்பாடு..
கவிதை என்
கவலைகளுக்கு வடிகால்..
தனிமையில்
என் நிழலுக்கு துணை..
ஏமாற்றங்களுக்கு நான் கொடுக்கும்
தற்காலிக பிரியாவிடை..
என்
கானல்நீர்க் கண்ணீர்..!!!
தோல்விகளை மறக்க நான் எடுக்கும்
ஒரு பிரயத்தனம்..
ஏக்கங்களின் வரவுக்கு ஒரு
முட்டுக் கட்டை..
மூச்சுத் திணறும் வேளைகளில்,
எனக்கு செயற்கை சுவாசம்...
மன வேதனைகளுக்கு இது
வலி நிவாரணி..
மனதின் காயங்களுக்கு
இளம் சூட்டு ஒத்தடம்,,,
மொத்தத்தில்
சில நாளிகை மட்டும் உயிர் வாழும் என்
சின்ன சந்தோசம்..!!!!!!!
-இனியவள் இன்ஷிராஹ்-
நின்று நான் எழுதிய கவிதையை
வெற்றியின் சின்னம் என்று
எவ்வாறு சொல்ல...?
இது வேதனைகளின் வெளிப்பாடு..
கவிதை என்
கவலைகளுக்கு வடிகால்..
தனிமையில்
என் நிழலுக்கு துணை..
ஏமாற்றங்களுக்கு நான் கொடுக்கும்
தற்காலிக பிரியாவிடை..
என்
கானல்நீர்க் கண்ணீர்..!!!
தோல்விகளை மறக்க நான் எடுக்கும்
ஒரு பிரயத்தனம்..
ஏக்கங்களின் வரவுக்கு ஒரு
முட்டுக் கட்டை..
மூச்சுத் திணறும் வேளைகளில்,
எனக்கு செயற்கை சுவாசம்...
மன வேதனைகளுக்கு இது
வலி நிவாரணி..
மனதின் காயங்களுக்கு
இளம் சூட்டு ஒத்தடம்,,,
மொத்தத்தில்
சில நாளிகை மட்டும் உயிர் வாழும் என்
சின்ன சந்தோசம்..!!!!!!!
-இனியவள் இன்ஷிராஹ்-
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என்னோட பிரெண்டுக்கு பிறந்த நாள்..
இன்னிக்கு இல்ல..
நாள் கடந்துடுச்சு..
நாட்பட்ட வாழ்த்து தான்..
ஆனா..
என் இதயத்தின்
வேர் தொட்ட வாழ்த்து..
புரிதல் இல்லாம
பிரிஞ்ச பிரென்ஷிப் இது..
இன்னும் நான் மிஸ் பண்றேன் தான்..
உறவை தானே
உன்னால் அறுக்க முடிஞ்சது..???
உண்டான நட்பின் சுவட்டை
என்ன செய்தாய்..???
தொடர்பை விட்டாய்..
தொங்கலாய் ஒதுங்கி கொண்ட
நினைவுகளை
என்ன செய்தாய்.??
முற்றாக மறக்க முடிந்தது உன்னால்..
முட்டுக் கட்டை போட முடியவில்லை
என்னால் உன் நினைவுக்கு..
கடந்த வருடம் உன் பிறந்த தினம் முழுக்க
என்னுடன் தானே கழித்தாய்..
நீயும் களித்தாய்
இன்று என்னை ஏன் தட்டிக் கழித்தாய்..??
உனக்கு நாள் கடந்து வாழ்த்துகிறேன்..
உன்னை மறந்ததால் இல்ல..
உன் உணர்வுகள் மரத்ததால்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
இன்ஷிராஹ்விடமிருந்து..
சின்னத் துளிகள்..
வயிற்றுப் பசி..!
அடுப்பில் எரிய
வலி இல்லாததால்
வயிற்றில் எரிகிறது நெருப்பு..!
இரைப்பைக்கு தெரியுமா
என் பணப்பை வெறுமை என்று..?
விலை வாசியின் வலை வீச்சில்
வளர்ந்தது என் வயிற்றுப் பசி..!
-இனியவள் இன்ஷிராஹ்-
திருமண சந்தை..!
சீதனம் என்னும் சாதனம்
விலை பேசப்படும் இங்கே..!
இதுவே
இல்லற வாழ்வின் நுழைவுச் சீட்டு..!
திருமண ஏக்கங்கள்
ஏலம் விடப்பட்டு,
பெண் உணர்வுகள்
பேரம் பேசப்பட்டு..
கன்னியரின் கற்பனைகள்
விற்பனை செய்யப் படும்
விந்தையான சந்தை...!
இங்கே
விற்பவனே
விலையும் கொடுக்க வேண்டும்.. !
-இனியவள் இன்ஷிராஹ்-
எழுதத் துடிக்கும் மனசு...!
எழுதத் துடிக்கிறது என் மனசு..
எழுத
காகிதம் காணாமல்
கனக்கிறது மனசு..
மெய்யான ஒன்றை
பேனா மையால் தான் எழுத வேண்டுமா..?
என்
இதயக் காகிதத்தில்
இரத்தத்தால் எழுதி வைத்த
கிறுக்கல்களை
மொழிபெயர்க்கிறேன்..!
நான் ஒரு இரட்டைப் பிறவி..
உயிர்ப் பலிகளுக்கு உடன் பிறப்பு
யுத்த பூமி என் பிறந்தகம் - அங்கு
செத்த உயிர்களே என் ஊர் மக்கள்..
உயிர் குடித்ததற்கு அத்தாட்சியாய்
ஈட்டி முனையின் ஈற்று விளிம்பில்
காய்ந்து கருத்துப் போன இரத்தம் போல
காய்ந்து கிடக்கிறது என் வாழ்க்கை..!
என்
தாயின் மரணம்
துப்பாக்கி முனையில்
தந்தையின் மரணம்
வாள் வீச்சில்
தங்கை மரணம்
ஷெல் வீச்சில்
தம்பியின் மரணம்
உயிர் தப்பி ஓடியவர்களின்
கால்களின் கீழே..
என் வார்த்தைகளின் மரணம்
வலிகளுக்குள்ளே..!
மனித
மனங்களின் மரணத்தால்
பிணங்கள் இரணமாகின
கழுகுகளுக்கு...
பிணங்களின் வாடையுடன்
பிணைந்து கிடக்கும் நான்...!
என் வாழ்க்கையின் முடிவு என்ன..?
இத்தனை உயிர்களை
குடித்த பூமிக்கு
நான் மட்டும் என்
சயனய்ட் ஆக மாறினேன்..?
உயிர் வேண்டுமா உயிர்..?
நல்ல உயிர்...
விலை எதுவும் இல்லை..
கையிருப்பு உள்ளவரை மட்டுமே..
என் உயிரினை எடுத்துச் செல்லுங்கள்..
எழுதத் துடிக்கும் என்
மனசை
மறித்து விடுங்கள்..
கொன்று தின்னும் நினைவுகளை
-இனியவள் இன்ஷிராஹ்-
முதல் பரீட்சை..!
முதல் பரீட்சை..!
தோல்வியைத் தழுவும் முதல் பரீட்சை..!
நான் எழுதிய
விஷப் பரீட்ஷையின்
விபரீத விளைவு இது..!
இது கேள்விப் பேப்பர் அல்ல..
தோல்விப் பேப்பர்..
தோற்பதற்கு விண்ணப்பம் வரைந்த
விடலைப் பெண் நான்..!
தொடு வானத்தை
தொட நினைக்கும்
ஒரு நட்சத்திரம் நான்..
தோல்வி என்று தெரிந்தும்
தொங்கிக் கொண்டு நிற்கிறேன் நான்..!
இல்லையென்றால்,
விடைத் தாள்கள் எனக்கு
க - விதைத் தாள்களாக மாறி இருக்குமா..?
நான் எழுதிய வெற்றுப் பேப்பர்...
இல்லையில்லை...
எழுதாமல் விட்டதனால் தானே
அது வெற்றுப் பேப்பர்..
அது என் மனதைப் போலவே
வெறுமையாய் இருக்கின்றது..
இது எனக்கு முதல் முறை..
துறை மாறி வந்ததால்
விழுந்த முதல் அறை..
கொடுப்பினை இல்லாததால்
இங்கு நான் வரவில்லை..
ஊழ்வினை எதுவும் இதன்
பின்னணியில் இல்லை..
வாய்ப்புக் கிடைக்காமல்
வாய் பிதற்றும் பட்டியலில் நானில்லை..
என் வாய்ப்புக்களை யாரும்
தட்டிப் பறிக்கவும் இல்லை...
அதை நான் யாருக்கும்
விட்டுக் கொடுக்கவும் இல்லை..
விட்டு விட்டேன்..
வாய்ப்புக்களை விட்டு விட்டேன்..
கைக்கு எட்டியது
வாய்கேட்டவில்லை என
அங்கலாய்ப்போர் பலர்..
ஆனால் நான்..
வாய்க்கெட்டி
வயிற்றுக்கு எட்டிய பின்,
வாந்தி எடுத்து விட்டேன்..
வாய்ப்புக்களை..
ஆற்றல் இல்லையே என்று
ஆற்றாமையில் அலறுவோர் பலர்..
நான் ஆற்றல்களை
ஆற்றுக்குள் போடவில்லை..
ஆழத்துக்கு சென்று
புதைத்து முத்திரையிட்டு வந்தேன்..
வினாப் பத்திரத்தில்
சித்திரம் கீறுகின்றேன்..
அல்லாஹ்வின் துணையும்
அடிக்கடி நான் எனக்குச் சொல்லும்
அசட்டு ஆருதல்களுமேஎன் வாழ்கையை
இன்னும்
இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது...!!!
-இனியவள் இன்ஷிராஹ்-
சனி, ஜூன் 11, 2011
இங்கு
ஏமாற்றங்கள் என்னையே விழுங்கி
ஏப்பம் இடுகின்றன..
எதிர்பார்ப்புக்கள், எண்ணங்கள்
எதிர்மறை செய்கையைக் காட்டுகின்றன..
நீண்ட என் பயணங்களில்
ஏக்கங்கள் மட்டும் தொடர்கின்றன..
வெற்றிகள் முற்றுப்புள்ளிகளுக்குள்
முழுதாய் புதைந்து விட்டன..
ஒரு வருடத்துக்குள்
என் வண்ண மய வாழ்க்கை
சாயம் போய் சாய்ந்தாடுகின்றது..
கனவுகளைக் கல்லறைக்குள் புதைத்தவள் நான்..
அன்று எனக்குள் இருந்த அனைத்தும்
இன்று புதைகுழிக்குள் புகுந்து விட்டன..
சந்தோசம்,
வெற்றிக் களிப்பு எல்லாம்
விடை பெற்று பல நாட்கள் ஆகின்றன..
இன்று என்னுள்..,
தோற்கடிக்கப்பட்ட இலட்சியங்கள்,
கலங்கிப் போன கனவுகள்,
விடைக்குள் வராத எதிர்காலம்,
இவற்றுடன்
கொஞ்ச நஞ்ச
எதிர்பார்ப்புகளின்
எச்ச சொச்சங்களும் மீதம் இருக்கின்றன..
-இனியவள் இன்ஷிராஹ்-
ஏமாற்றங்கள் என்னையே விழுங்கி
ஏப்பம் இடுகின்றன..
எதிர்பார்ப்புக்கள், எண்ணங்கள்
எதிர்மறை செய்கையைக் காட்டுகின்றன..
நீண்ட என் பயணங்களில்
ஏக்கங்கள் மட்டும் தொடர்கின்றன..
வெற்றிகள் முற்றுப்புள்ளிகளுக்குள்
முழுதாய் புதைந்து விட்டன..
ஒரு வருடத்துக்குள்
என் வண்ண மய வாழ்க்கை
சாயம் போய் சாய்ந்தாடுகின்றது..
கனவுகளைக் கல்லறைக்குள் புதைத்தவள் நான்..
அன்று எனக்குள் இருந்த அனைத்தும்
இன்று புதைகுழிக்குள் புகுந்து விட்டன..
சந்தோசம்,
வெற்றிக் களிப்பு எல்லாம்
விடை பெற்று பல நாட்கள் ஆகின்றன..
இன்று என்னுள்..,
தோற்கடிக்கப்பட்ட இலட்சியங்கள்,
கலங்கிப் போன கனவுகள்,
விடைக்குள் வராத எதிர்காலம்,
இவற்றுடன்
கொஞ்ச நஞ்ச
எதிர்பார்ப்புகளின்
எச்ச சொச்சங்களும் மீதம் இருக்கின்றன..
-இனியவள் இன்ஷிராஹ்-
எனது கவிதைகள்..!!!
மௌனம்...!!!
மொழி பெயர்க்க முடியாத
மோகனக் கவிதை..
மௌனம் பிரசவிக்கும் மொழிகள்
விழிகளில் தான் வெளிப்படும்./
இது சப்தம் அனுஷ்டிக்கும் விரதம்..
முதிர்ச்சி என்பது மௌனத்தில் தான்..
மொட்டவிழும் மலரின் மௌனம்..
பூப்படைந்த புதுப்பெண்ணின் நாணம்..
இவ்வாறு மௌனத்தின் மொழிகள்
எப்போதும் மோகனமாய்த்தான் இருக்கின்றன..
மௌனம் தான் உன் வார்த்தைகளை
வடிகட்டி வனப்பூட்டுகிறது..
சப்தம் - செவிகள் செவிமடுக்கும் ஓசை..!
நிசப்தம்- இதயம் செவிமடுக்கும் பாஷை..!
மௌனம் மொழியின் கவசம்..!
மேகத்தால் சூழ்ந்த நிலவு அழகு..!
முக்காட்டுப் பெண் அழகு..!
மொழியின் முக்காடு இந்த மௌனம்..!
மௌனம் வார்த்தைகளின் மரணம் அல்ல..
மனிதத்தின் பூரணம்...!
வெள்ளி, ஜூன் 10, 2011
என்னுடைய முதல் பதிவு..!!!
அன்பு. ஒரு அற்புதமான சொல். உணர்ச்சிகளின் வெளிப்பாடு. உன்னதமான உணர்ச்சி. உயிரின் நிலவுகைக்கு ஆதாரம். அடிப்படை. ஜீவராசிகளின் ஜீவ நாதம். அன்பு வெளிப்படுத்தப் படும் விதமும் நேரமும் தான் வேறே தவிர அதன் ஊற்று ஒன்று தான். பிறப்பிடம் ஒன்று தான். அது தான் மனம்.
அன்பில் நிறைய இருக்கு. அதுல விசேசமான அன்பு பெற்றோர்ட அன்பு. அது எந்த எதிர்பார்ப்புமே இல்லாத கலப்படமில்லாத தூய அன்பு. அந்த அன்புக்கு ஈடா எதுவும் நிற்கவும் முடியாது. அத எந்த அன்பாலயும் மாற்றீடு செய்யவும் முடியாது. நிரப்பவும் முடியாது. அது இல்லைனா நாங்க உணர்ச்சி உள்ள மனிதர்களா இருக்கவும் முடியாது.
என்னோட ஆக்கத்துக்கு காரணமான என் பெற்றோரை நான் ரொம்ப நேசிக்கிறேன். மதிக்கிறேன். அதனால தான் என்னோட முதல் பதிவு பெற்றோர் அன்பு பற்றி. இனி நான் எழுதப் போற எல்லா விசயங்களும் அவர்களுக்கு தான் சமர்ப்பணம்..!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













