செவ்வாய், ஜூன் 14, 2011

கானல்நீர்க் கண்ணீர்....!!!

விரக்தியின் விளிம்பில்
நின்று நான் எழுதிய கவிதையை
வெற்றியின் சின்னம் என்று
எவ்வாறு சொல்ல...?
இது வேதனைகளின் வெளிப்பாடு..
கவிதை என்
கவலைகளுக்கு வடிகால்..
தனிமையில்
என் நிழலுக்கு துணை..
ஏமாற்றங்களுக்கு நான் கொடுக்கும்
தற்காலிக பிரியாவிடை..
என்
கானல்நீர்க் கண்ணீர்..!!!
தோல்விகளை மறக்க நான் எடுக்கும்
ஒரு பிரயத்தனம்..
ஏக்கங்களின் வரவுக்கு ஒரு
முட்டுக் கட்டை..
மூச்சுத் திணறும் வேளைகளில்,
எனக்கு செயற்கை சுவாசம்...
மன வேதனைகளுக்கு இது
வலி நிவாரணி..
மனதின் காயங்களுக்கு
இளம் சூட்டு ஒத்தடம்,,,
மொத்தத்தில்
சில நாளிகை மட்டும் உயிர் வாழும் என்
சின்ன சந்தோசம்..!!!!!!!

-இனியவள் இன்ஷிராஹ்-

2 கருத்துகள்:

  1. சகோதரி உங்களுனடைய கவிதையைப் பார்க்கும் பொழுது நான் என்றும் நேசிக்கும் கவிஞர் கன்னதாசனுடைய வரிகளை உங்கள் மூலமாக பார்க்கின்றேனா? என்ற என்னம் ஏற்படுகிறது. மிகவும் ஆளமான கருத்துக்களை அனைவரையும் கவரும்படியாகயும், இலகுவில் புரியும்படியாகவும் உங்களது கவிதைகள் அமைகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்க்கை கொடுக்கும்
    வலிகள்
    கவிதையாகும் போது
    சோகங்கள்
    தீயில் தீயும். . . .

    பதிலளிநீக்கு