சனி, ஜூன் 11, 2011

எனது கவிதைகள்..!!!

மௌனம்...!!!

மொழி பெயர்க்க முடியாத 
மோகனக் கவிதை..
மௌனம் பிரசவிக்கும் மொழிகள்
விழிகளில் தான் வெளிப்படும்./
இது சப்தம் அனுஷ்டிக்கும் விரதம்..

முதிர்ச்சி என்பது மௌனத்தில் தான்..
மொட்டவிழும் மலரின் மௌனம்..
பூப்படைந்த புதுப்பெண்ணின் நாணம்..
இவ்வாறு மௌனத்தின் மொழிகள்
எப்போதும் மோகனமாய்த்தான் இருக்கின்றன..  

மௌனம் தான் உன் வார்த்தைகளை
வடிகட்டி வனப்பூட்டுகிறது..
சப்தம் - செவிகள் செவிமடுக்கும் ஓசை..!
நிசப்தம்- இதயம் செவிமடுக்கும் பாஷை..!

மௌனம் மொழியின் கவசம்..!
மேகத்தால் சூழ்ந்த நிலவு அழகு..!
முக்காட்டுப் பெண் அழகு..!
மொழியின் முக்காடு இந்த மௌனம்..!

மௌனம் வார்த்தைகளின் மரணம் அல்ல..
மனிதத்தின் பூரணம்...!
 

7 கருத்துகள்:

  1. //மௌனம் வார்த்தைகளின் மரணம் அல்ல..
    மனிதத்தின் பூரணம்...!//

    அருமையான கவிதை இன்னும் எதிர்பார்ர்கின்றோம்..

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்தினைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சுஹைல் நானா..

    பதிலளிநீக்கு
  3. "மௌனம் பிரசவிக்கும் மொழிகள்
    விழிகளில் தான் வெளிப்படும்"...
    உண்மைதான்
    மௌனம் உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் விட அழகானது./
    இது சப்தம் அனுஷ்டிக்கும் விரதம்...

    பதிலளிநீக்கு
  4. உங்கள் வலைப் பூவை பார்த்தேன்,வாசித்தேன் ,ரசித்தேன் உங்கள் கவிதைகளில் முதுமை தெரிகிறது வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்......

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வலைப் பூவை பார்த்தேன்,வாசித்தேன் ,ரசித்தேன் உங்கள் கவிதைகளில் முதுமை தெரிகிறது வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்......

    பதிலளிநீக்கு
  6. Manathai kavarum iniya sol valthudan nenjai thoddu sellum muththaha ik kavithai amayap petrukkinrarhu...

    par potrum kavi pulavarsiyai thikala en manamarntha Valthukkal

    ivan
    un Nanpan
    Hilmikar

    பதிலளிநீக்கு