செவ்வாய், ஜூன் 14, 2011

சின்னத் துளிகள்..

வயிற்றுப் பசி..!

அடுப்பில் எரிய
வலி இல்லாததால் 
வயிற்றில் எரிகிறது நெருப்பு..!

இரைப்பைக்கு தெரியுமா
என் பணப்பை வெறுமை என்று..?

விலை வாசியின் வலை வீச்சில்
வளர்ந்தது என் வயிற்றுப் பசி..!

-இனியவள் இன்ஷிராஹ்-




திருமண சந்தை..!


சீதனம் என்னும் சாதனம்
விலை பேசப்படும் இங்கே..!
இதுவே
இல்லற வாழ்வின் நுழைவுச் சீட்டு..!
திருமண ஏக்கங்கள்
ஏலம் விடப்பட்டு,
பெண் உணர்வுகள்
பேரம் பேசப்பட்டு.. 
கன்னியரின் கற்பனைகள்
விற்பனை செய்யப் படும் 
விந்தையான சந்தை...!

இங்கே
விற்பவனே
விலையும் கொடுக்க வேண்டும்.. !

-இனியவள் இன்ஷிராஹ்-

2 கருத்துகள்:

  1. சகோதரி யதார்த்தமான கவிதையைத் தந்திருக்கிறார். வாழ்த்துக்கள். இன்னும் பல யதார்த்தமான கவிதைகளை எதிர்பார்க்கின்றோம். அனைத்து ஆண்களும் இந்த கவிதையைப்பார்த்தாவது திருந்தனால் சிறப்பும் அல்லாஹ்வின் அருளும் கிடைக்குமென நம்புகிறேன். மீண்டும் சகோதரிக்கு எனது இதயத்தின் ஆழத்தில் பொங்கிப் புக்கும் நன்றி மலர்களை காணிக்கையாக்குகின்றேன்

    பதிலளிநீக்கு
  2. ஸலாம்!
    உங்கள் பக்கத்திற்கு என் பயனம் புதிது.

    ”வயிற்றுப் பசி..!” கவிதையைத்தான் முதலில் வாசித்தேன். மாஷா அல்லாஹ்! நினைப்பதற்கு மாற்றமாக வருவதுதான் புதுக் கவிதை. வாசித்து முடிந்ததும் மனதுக்குள் அது ரீங்காரமிடும். குறித்த கவிதை தற்போது என் மனதில் ரீங்கரிக்கிறது.

    வாழ்த்துக்கள்...
    www.aliaalif.tk

    பதிலளிநீக்கு